×

முதல்வர் குடும்பம் குறித்து எக்ஸ் தளத்தில் அவதூறு பதிவு: விளக்கம் கேட்டு சைபர் கிரைம் கடிதம்

சென்னை: எக்ஸ் வலைத்தளத்தில் முதல்வர் குடும்பத்தினர் குறித்து அவதூறு பதிவை நீக்க கோரி சென்னை மாநகர சைபர் கிரைம் சார்பில் டிவிட்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எக்ஸ் வலைத்தளத்தில் நேற்று முன்தினம் நெல்லைபாய் 143 உள்ளிட்ட 3 ஐடிகளில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் குறித்து அவதூறாக பதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வேப்பேரியை சேர்ந்த உளவுத்துறை காவலர் டேனியல் மாநகர காவல்துறையில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார்.

அதன்படி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஹேமா விசாரணை நடத்தினார். ஆனால் அந்த பதிவு வெளியிட்ட நபர்கள் குறித்து சரியான விபரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, அவதூறு கருத்துக்களை பதிவு செய்த நபர்கள் மீது ஐபிசி 153, 294பி, 504, 354ஏ, 509 மற்றும் பிரிவு 67 ஐடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எக்ஸ் வலைத்தளத்தில் உள்ள அவதூறு பதிவுகளை நீக்கவும் பதிவு செய்த நபர்கள் குறித்து தகவலை வழங்கும்படியும் டிவிட்டர் நோடல் அதிகாரிக்கு மாநகர சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

The post முதல்வர் குடும்பம் குறித்து எக்ஸ் தளத்தில் அவதூறு பதிவு: விளக்கம் கேட்டு சைபர் கிரைம் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Twitter ,Chennai Metropolitan Cybercrime ,Chief Minister ,Tamil Nadu ,Nellaibai 143 ,Dinakaran ,
× RELATED இளையராஜாவை மறைமுகமாக தாக்கினாரா...